திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்யபாமா, சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இதற்கு தாராபுரம் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று (மே 28) 'விலை போன துரோகி சத்தியபாமா' என அதிமுகவினர் ஒட்டிய சுவரொட்டியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.