திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த 31 வயதான கவுதம், திருப்பூர் மாவட்டம் மூலனூரில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு கணவரைப் பிரிந்து 7 வயது மகனுடன் வசித்து வந்த 29 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்தது. இருவரும் கடந்த 3-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு மூலனூரில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலுக்கு ஆளான கவுதம், தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்தார்.