தாராபுரம்: கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது.. 5 கிலோ பறிமுதல்

தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜயகுமார் என்பவரிடம் இருந்து 5 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிஜயகுமார் தாராபுரம் அருகே குடும்பத்துடன் வசித்து தனியார் மில்லில் கூலி வேலை செய்து வந்துள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி