திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை வாடகைக்கு ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஜெபராஜ், பயணத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கழுத்தறுக்கப்பட்டு படுகாயமடைந்தார். இளைஞர்கள் தப்பி ஓடிய நிலையில், ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.