தாராபுரத்தில் வணிக வரித்துறை அலுவலக புதிய கட்டடம் திறப்பு

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சியம்பாளையம் கிராமத்தில் ரூ. 2 கோடியே 53 லட்சம் செலவில் புதிதாக வணிக வரித்துறை அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். 

அதைத்தொடர்ந்து நஞ்சியம்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி, கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆகியோர் வணிக வரித்துறை அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி வைத்தனர். 

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன், இணை ஆணையர் (திருப்பூர் வணிகவரி) கார்த்திகேயனி, இணை ஆணையர் (நுண்ணறிவு) விமலா, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல. பத்மநாபன், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்புக்கண்ணன், முன்னாள் எம். எல். ஏ. பிரபாவதி, திட்டக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், ஆர். டி. ஓ. பெலிக்ஸ் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி