மேலும் மின் இணைப்புகளை கொண்டு செல்வதற்கான அரசின் விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை. பொதுபாதைகளில் மின் கம்பிகளை கொண்டு செல்வதால் சிறு குறு விவசாயிகள் புதிய மின் இணைப்புகளை நிரந்தரமாக பெற வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது. குளங்கள் நீர் வழிப்பாதைகள் எவ்வித பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்காமல் மின்கம்பங்கள் அமைப்பது மழைக்காலங்களில் பெரும் அபாயங்களை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் அச்சமடைகிறார்கள்.
இத்தகைய பணிகளை தொடங்கும் முன் அப்பகுதி பொதுமக்கள் கருத்துக் கூட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும், உரிய அதிகாரிகள் குழு மூலம் மக்கள் கருத்து கேட்டு கூட்டம் நடத்தி முறையான ஆய்வுகளை நடத்தி பிரச்சனையில் தீர்வு காண வேண்டும் என்பதே மூலனூர் பகுதியில் 10-க்கு மேற்பட்ட ஊராட்சிகள் மக்களின் குரலாக எதிரொலிக்கிறது.