குமாரசாமி வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த நடராஜ் உன்னால் தான் என் குடும்பம் வீணாகிப் போனது எனக் கூறி குமாரசாமி கடப்பாரையால் தாக்கினார். பலத்த காயமடைந்தவரை முதல் சிகிச்சைக்கு காங்கேயம் அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து இறந்த குமாரசாமி மனைவி சகுந்தலா காங்கேயம் போலீசில் புகார் செய்தார். காங்கேயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நடராஜை கைது செய்தனர். இவ்வழக்கு தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சரவணன் வழக்கை விசாரித்து நடராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் ரூ. 6000 அபராதம் விதித்தார். தீர்ப்பை அடுத்து போலீசார் நடராஜை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.