ரூ.65 லட்சம் கடனுக்கு.. ரூ.1. 50 கோடி கேட்ட தனியார் வங்கி

பல்லடம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராக்கியப்பன். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகனான சிவநேசன் பூர்வீக சொத்து 4 ஏக்கர் நிலத்தில் தொழில் செய்ய 2013ம் ஆண்டு 65 லட்சம் தனியார் வங்கியில் கடன் பெற்று உள்ளார். பெற்ற கடனை தவறாமல் திருப்பி செலுத்தி வந்துள்ளனர். தொடர்ந்து கொரோனா, ஜி எஸ்டி பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தொழில் முற்றிலும் நலிவடைந்து பணம் கட்ட முடியாத சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது. ரூ 65 லட்சம் கடன் பெற்று ரூ.50 லட்சம் செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சோமனூரில் உள்ள தனியார் வங்கியை சேர்ந்த அதிகாரிகள் இன்னும் 80 லட்சம் பணம் கட்ட வலியுறுத்தி தற்போது ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து அப்பகுதி விவசாய சங்கத்தினர் பொதுமக்கள் அங்கு திரண்டனர். மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில் விவசாய நிலத்தின் பேரில் தாங்கள் 65 லட்சம் கடன் தொகைக்கு 25 லட்சம் 25 லட்சமாக 50 லட்சம் வரை கட்டி உள்ளதாகவும், மேலும் 15 லட்சம் பாக்கி உள்ள நிலையில் 70 லட்சம் கட்ட வற்புறுத்தி வருவதாகவும். கட்டாத பட்சத்தில் ஜப்தி நடவடிக்கையில் தனியார் வங்கியினர் ஈடுபட உள்ளதாகவும் இதனால் தாங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவர்கள் தெரவித்தனர். மேலும் வங்கி அதிகாரிகள் ஜப்தியை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி