திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தனி தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த சத்யபாமா வெற்றி பெற்றார். பின்னர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். நேற்று தாராபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சத்யபாமா, தாராபுரம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தினார் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.