திருப்பூர்: பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவர்களை கொலை வழக்குப் பதிய கோரிக்கை

மைக்ரோ பைனான்ஸ் மேலாளர் அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை செய்த கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்ய ஆதித்தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது. 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மைக்ரோ பைனான்ஸ் நிறுவன மேலாளர், கடன் வாங்கி செலுத்த முடியாத பெண்ணை மோசமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி, தற்கொலை செய்துகொள்ள என்று மிரட்டியதால், மனம் முறிந்து அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த பிரச்சனையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன மேலாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். 

பெண்ணின் கடனை தள்ளுபடி செய்வதுடன், அவரது குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் கட்சியினர் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் தாராபுரம் கோட்டாட்சியர் பிலிக்ஸ் ராஜாவிடம் மனு கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி