திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியத்தைச் சேர்ந்தவர் வாழைப்பழ வியாபாரி ஜாகிர் உசேன். இவர் தனது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அலங்கியம் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் நான்கு கஞ்சா செடிகள் கண்டறியப்பட்ட நிலையில், ஜாகிர் உசேன் கைது செய்யப்பட்டார். மேலும், 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.