திருப்பூர்: தேன் விற்பது போல் நோட்டமிட்டு கைவரிசை.. தம்பதி கைது

மூலனூர் பகுதியில் உள்ள கிராம கோவில்களில் உண்டியல் காணிக்கை, பூஜை பொருட்கள், பித்தளை தட்டுகள் திருட்டு போன சம்பவங்கள் தொடர்பாக மூலனூர் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தில் கொம்புத்தேன் விற்பனை செய்வது போல் வந்து திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த பரமேஸ்வரன் (46) மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி