தாராபுரத்தில் சரக்கு ஆட்டோ விபத்து: 6 பேர் படுகாயம்

தாராபுரத்தில் இருந்து கட்டட வேலைக்காக சரக்கு ஆட்டோவில் சென்ற 10 பேரில் 6 பேர் படுகாயமடைந்தனர். வியாழக்கிழமை காலை ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை, ரங்கம்பாளையம் பிரிவு அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ அரிசிக் கடை மீது மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்த ஓட்டுநர் கன்னியப்பன் மற்றும் 5 பெண்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூலனூர் போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி