திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டி.காளிபாளையத்தை சேர்ந்த 14 வயது 8ம் வகுப்பு மாணவர், உறவினருடன் சென்றபோது பைக்கில் நேரிட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் பைக்கில் சென்ற மற்ற இருவரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.