உடுமலை: இடையூறு ஏற்படுத்தும் யானைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூணாறு சாலையில் உள்ள வனப்பகுதியில் யானைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை ஓரங்களில் நின்று வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் சில வாகனங்களை யானைகள் தாக்கி சேதப்படுத்தியதால், உடுமலை வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி