தாராபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஆத்தியப்பன் மனைவி ஜோதி, ஞாயிறு காலையில் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, மணகடவு தனியார் உணவகம் அருகே பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள் அவரது கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர். அப்போது, சங்கிலி அறுந்து கீழே விழுந்ததில், ஜோதியும் அவரது கணவர் ஆத்தியப்பனும் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்கள் கூச்சலிட்டதால், மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.