திருப்பூர்: அண்ணா பல்கலைகழக பாலியல் கொடுமை தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன், போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, கை காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அஇஅதிமுக திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் துர்க்கை அம்மன் கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக கட்சியினர் 800 பேர் கைது செய்யப்பட்டனர். அனுமதி மீறி திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற எம்எல்ஏவும் விமான சி. மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை 5 பேருந்துகளில் ஏற்றி அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர். மண்டபத்தின் அருகே 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி