தாராபுரத்தில் அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமாகாவில் இணைந்ததற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சிக்கு துரோகம் செய்ததாகக் கூறி சத்தியபாமாவின் படத்தை கீழே போட்டு செருப்பால் அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி