உடுமலை அருகே தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வேன்

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பூர் சாலையில் சின்ன வீரன் பட்டி ஊராட்சி மணியக்காரர் சாலை பிரிவு பகுதியில், திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கி வந்த சரக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் காயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடுமலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி