பைக் மீது பஸ் மோதி மனைவி கண் முன்னே விவசாயி பலி

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டத்துறையை சேர்ந்தவர் விவசாயி சிதம்பரம். இவரது மனைவி வசந்தி இவர்கள் இரண்டு பேரும் நேற்று முன்தினம் தாராபுரத்தில் உள்ள உறவினரை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் பழனி நோக்கி சென்றனர். இவர்கள் சென்ற பைக் தாராபுரம் அலங்கியம் ரவுண்டானா அருகே சென்ற போது எதிரே ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்த அரசு பேருந்து இவர்களது பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பலத்த காயம் காயமடைந்த சிதம்பரம் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிதம்பரம் இறந்தார். வசந்தி லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார். இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல்துறை அரசு பஸ் ஓட்டுநர் திண்டுக்கலை சேர்ந்த கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி