விசாரணையில் மின் கசிவு ஏற்பட்டு கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முதலில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பின்பு மெல்ல மெல்ல பரவிய தீ கடைக்குள்ளும் பரவி உள்ளே இருந்த இரண்டு சிறிய ரக சரக்கு வாகனங்களின் டயர்கள் தீயில் கருகின. மேலும் கடைக்குள் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் நாற்காலிகள், பிளாஸ்டிக் மேஜைகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. தீ விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கடையில் இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்