காங்கேயம் அருகே தெரு நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் விவசாயி சேகர் தனது 10 ஏக்கர் நிலத்தில் வளர்த்து வந்த 8 செம்மறி ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்றன. மேலும் 16 ஆடுகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றன. கால்நடைத் துறையினர் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி