இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், வாணியம்பாடி மோகன் மகன் பாஸ்கரன் வயது 36, திருப்பத்தூர் மந்திரம் மகன் சுந்தர் வயது 24, சேதி நல்லூர் தூத்துக்குடி ராஜா மகன் புவனேஷ்வரன் வயது 26, தேனி பெரியகுளம் பொன்னையா மகன் சச்சின் வயது 20, தேனி பெரியகுளம் திருமலை தம்பி மகன் முருகேஷ் வயது 30 ஆகிய ஐந்து பேர் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக குண்டடம் போலீசார் Ford Fiesta TN 69 L 0651 என்ற சொகுசு காரையும் மறைத்து வைத்திருந்த எட்டு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் விசாரணை செய்ததில் தேனி மாவட்டத்தில் கஞ்சாவை வாங்கி கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் விற்பனை செய்ய வந்தபோது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் விரிவான விசாரணையை போலீசார் மேற்கொண்டு தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.