திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் வடமாநில வாலிபர்கள் சிலர் போதைப்பொருட்களுடன் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (23), சோகல்குமார் (25), ஜஞ்சன்குமார் (22) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 5-ந் தேதி இரவு பீகாரில் இருந்து ரயில் மூலம் வந்ததும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.