ஈரோடு: கிணற்றில் குளித்த பள்ளி மாணவன் பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுவடவள்ளி, பட்டவர்த்தி அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கனகராஜ் இவரது மகன் கிரண்குமார் (13), இவர் வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அரையாண்டு விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த கிரண்குமார் நேற்று முன்தினம் மதியம் நண்பருடன் கிணற்றில் இறங்கி குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்று நீரில் மூழ்கியதை, தீயணைப்புத் துறையினர் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி