சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலைகள் லாரியின் பின் சக்கரத்தில் விழுந்த பூக்கடை மேலாளர் பலி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம், ராமபைலூரைச் சேர்ந்தவர், ஈஸ்வரமூர்த்தி (37), பூக்கடையில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இன்று மாலை வேலை முடிந்தவுடன் வீட்டிற்குச் செல்வதற்காக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். பழைய பேருந்து நிலையம் தனியார் வங்கி முன் அதே திசையில் கோவை, செட்டிபாளையத்தைச் சேர்ந்த முருகானந்தம் (44) என்பவர் ஓட்டி வந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து சத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.