திருப்பூர்: லாரி மோதி வாலிபர் பலி

திருப்பூர் மண்ணரை ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தகுரு சாமி என்பவரது மகன் வெங்கடேஷ் (29). இவர் தனது ஸ்கூட்டரில் திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி சென்று கொண்டிருந்தார். திம்மநாயக்கன்பாளையம் ரெயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசுக்கு தலை யில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போரா டிக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே வெங்கடேஷ் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார், லாரியை ஓட்டி வந்த நெல்லை பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி