அவிநாசி: இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி

அவினாசி, கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் கணேஷ் (வயது 59). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 8-ந்தேதி அவினாசியில் இருந்து திருப்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பெரியார் காலனி அருகே வந்தபோது கணேஷ்க்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் பின்பகுதியில் மோதி கீழே விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி