திருப்பூர்: வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு பெண் பலி

திருப்பூர்-ஊத்துக்குளி இடையே ஊத்துக்குளி ஆர்.எஸ். அருகே நேற்று முன்தினம் (ஜூன் 14) இரவு 10 மணி அளவில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூருவில் இருந்து கோவை சென்ற வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த பெண் யார்? தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி