அவிநாசி: புதிய கட்டிடம் திறப்பு எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அவினாசி வட்டார போக்குவரத்து அலுவலகம் பழங்கரை அருகே அவினாசி - ஈரோடு மெயின்ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடம் பொதுப்பணி துறைக்கு சொந்தமானது. இந்த நிலையில் அவினாசி - ஆட்டையாம்பாளையம் அருகே புதியதாக வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடப் பணி முடிந்து 4 மாதங்கள் ஆகிறது. எனவே விரைவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் புதிய கட்டிடத்தில் செயல்பட வழிவகை செய்து மீண்டும் பொதுப்பணித்துறை அலுவலகம் அங்கே செயல்பட வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி