திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதியில் கோடை சீசனை இலக்காக வைத்து தர்பூசணி சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாகுபடியைக் குறைத்துள்ளனர். தற்போது ஆந்திராவில் இருந்து வரும் தர்பூசணி கிலோ ரூ. 35-ல் இருந்து ரூ. 55 ஆக உயர்ந்துள்ளது. உள்ளூர் வரத்து தொடங்கும் வரை விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.