திருப்பூரில் ரூ. 77 லட்சம் மோசடி.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கடந்த சில காலமாக பங்கு வர்த்தக முதலீடு தொடர்பாக பல்வேறு மோசடிகள் நடந்து வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகளில் பொதுமக்கள், வர்த்தகர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் பெரியாண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 51). இவருடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகப்படியான லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை நம்பிய சரவணகுமார் வாட்ஸ் அப்பில் வந்த லிங்க்கை கிளிக் செய்து பல கட்டமாக பங்கு வர்த்தகத்தில் ரூ. 77 லட்சத்து 77 ஆயிரம் வரை செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு எந்த பணமும் கிடைக்கவில்லை. லாபமும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சரவணகுமார் சம்பந்தப்பட்ட தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அதன் பிறகே பங்கு வர்த்தக முதலீடு என கூறி தான் ஏமாற்றப்பட்டத்தை அவர் அறிந்தார். இதுகுறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசுக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார். அதைப்பெற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி