திருப்பூர்: சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி, மூலனூர் ஊராட்சி ஒன்றியம், பொன்னிவாடி ஊராட்சி, பொன்னிவாடி கிராமத்தில் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் 2025-2026 மூலம் ரூ.50.00 இலட்சம் மதிப்பில் ஆதிதிராவிடர் காலனியில் புதிய சமுதாயநலக்கூடம் அமைக்கும் பணியை மாண்புமிகு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. துரை. தமிழரசு அவர்கள், இந்நாள்-முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி