திருப்பூர்: விளையாடச் சென்ற சிறுவன் நீர்த்தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு

திருப்பூர் அருகே காங்கயம் சாலையில் உள்ள தனியார் உணவக வளாகத்தில், பராமரிப்பின்றி இருந்த நீச்சல் குளத்திற்கு அருகே சென்ற 9 வயது சிறுவன் ஆரிஃப், நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தான். திங்கள்கிழமை மாலை நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி