ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்டிரைவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, உரிய ஆவணங்கள் இன்றி ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பல்லடம் வட்டம் சின்னக்கரை – 63 வேலம்பாளையம் சாலையில் உள்ள கரைப்புதூர் லட்சுமி நகர் பாலம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. அனுமதியின்றி கனிமங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த திடீர் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி