அவினாசி: மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்

கோடை விடுமுறைக்குப் பிறகு நேற்று (ஜூன் 2) பள்ளிகள் திறந்தன. திருப்பூரை அடுத்த அவினாசி தெக்கலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை வழங்கித் தொடங்கி வைத்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். 

மாவட்டத்தில் 965 தொடக்கப்பள்ளிகள், 264 நடுநிலைப்பள்ளிகள், 89 உயர்நிலைப்பள்ளிகள், 95 மேல்நிலைப்பள்ளிகள் என 1,413 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் 2 லட்சத்து 4 ஆயிரத்து 633 பேருக்கு புத்தகப்பை, 8 லட்சத்து 30 ஆயிரத்து 928 பாடப்புத்தகங்கள், 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் 16 லட்சத்து 55 ஆயிரத்து 177 நோட்டுகள், 98 ஆயிரத்து 984 பேருக்கு சீருடைகள் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி காளிமுத்து, மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி ரஞ்சிதாதேவி, தெக்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாநகர அமைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி