எஸ். இரகுநாதன் வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர். குமார் சிறப்புரை ஆற்றினார். தாராபுரம் தாலுக்கா செயலாளர் ஆர். வெங்கட்ராமன், மாவட்ட குழு உறுப்பினர் பி. வேலுச்சாமி, தாராபுரம் கண்ணுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார். கிளை நிர்வாகிகளாக தலைவராக எஸ். இரகுநாதன், செயலாளராக என். குப்புசாமி, பொருளாளராக பாலசுப்பிரமணியம், துணைத் தலைவராக என். பழனிச்சாமி, துணை செயலாளராக முருகேஷ் ஆகியோர் உட்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. மூலனூர் வட்டாரத்தில் 14 கிராம ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு வறட்சியை போக்கும் வகையில் அமராவதி ஆற்றில் வெள்ள உபரிநீர் வரும் காலத்தில் நீரேற்றி (அவிநாசி அத்திக்கடவு திட்டம் போல) குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும். போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.