திருப்பூர்: தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பெருமாநல்லூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொகுதி மறு சீரமைப்பு கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்ய விருப்ப மனு வழங்கினார்கள். கூட்டத்திற்கு தலைமை நிலைய செயலாளர் ராயநல்லூர் உ. கண்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் அரசியல் சாதனை விளக்க துண்டு அறிக்கையை வெளியிட்டார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் தாராபுரம் சரவணன், குன்னத்தூர் குழந்தைவேலு, மங்கலம் ஜாபர் ஆகியோர் செய்திருந்தனர். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்தனர். முடிவில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கா. சாதிக் பாட்ஷா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி