திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பாப்பம்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு உறங்க சென்ற நிலையில், காலையில் சென்று பார்த்தபோது தெரு நாய்கள் கடித்து 15 செம்மறி ஆடுகள் உயிரிழந்தும், 20க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து ஊத்துக்குளி சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ஆடுகளை ஆய்வு செய்தார். 15 செம்மறி ஆடுகள் தெருநாய்கள் கடித்து உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.