கே.பி.ஆர். மில் குழுமத்தின் இந்த ஒப்பில்லாத கல்விச் சேவையில், இதுவரை நாற்பத்தி ஓராயிரம் பெண் பணியாளர்கள் மாணவிகளாக இருந்து உயர்கல்வி கற்று பட்டம் பெற்றுள்ளனர். அவர்களில் பலர் உயர் பதவியில் அரசு வேலை, பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவியில் வேலை, வெளிநாடுகளில் வேலை என பல வகையிலும் பலரும் பயன் பெற்றுள்ளனர். இந்த வகையில், கே.பி.ஆர். மில் குழும பெண் பணியாளர்கள் கல்வி பிரிவின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூரில் உள்ள கே.பி.ஆர். மில் குழும வளாகத்தில் உள்ள உள்அரங்கில் நடைபெற்றது.
இந்த ஆண்டு 579 பெண் பணியாளர்கள் உயர்கல்வி முடித்து பட்டம் பெற்றுள்ளனர். பட்டம் பெற்ற பெண் பணியாளர் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், முதல் 11 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், முதல் இடத்தை பிடித்த மாணவிகளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.