பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 22.5 கிராம் தங்கம், 295 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 17 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம் ஆகியவை எண்ணப்பட்டன. உதவி ஆணையர் தமிழ்வாணன், ஆய்வாளர் வீரப்பன், செயல் அலுவலர் முருகன், அறங்காவலர் குழு தலைவர் மனோகரன் மற்றும் அறங்காவலர்கள், மகாவிஷ்ணு சேவா சங்கம் உறுப்பினர்கள், கே.எம்.சி. பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் இந்த காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.