சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஹேமலதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் மனித சங்கிலி மற்றும் ஊர்வலம் நடத்தினர். புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி கல்லூரி வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சாலை பாதுகாப்பு குறித்த ஸ்டிக்கர்களையும் ஒட்டினர். சாலை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி