கோவையில் இருந்து திருப்பூருக்குச் சென்ற தனியார் பஸ், அவினாசியைச் சேர்ந்த மாணவியை தெக்கலூர் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல், சின்னியம்பாளையத்தில் இறக்கிவிட்டதால், மாணவியின் பெற்றோரும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு வந்து, தனியார் பஸ் ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.