திருப்பூர்: பாலத்தை உயர்த்தி கட்ட பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மேற்குபதி ஊராட்சி முட்டிக்காளான்பதி பகுதியில் 100 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் அத்திக்கடவு திட்டத்திற்கான குளம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் சிறிய பாலம் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் சிறிய பாலம் வழியாக தண்ணீர் செல்லும். மேலும் தண்ணீர் அதிகமானால் அதில் வரும் குப்பைகள் பாலத்தின் துளைகளை அடைத்துவிடுகின்றன. இதனால் பாலத்தின் துளை வழியாக செல்லாமல் தண்ணீர் வெளியேறி, அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. எனவே அந்த பாலத்தை உயர்த்திக் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி