அவினாசி: தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப் போட்டு தற்கொலை

அவினாசியில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: - ஆசிரியை தற்கொலை செய்த பிரீத்தி (வயது 37) அவினாசியை அடுத்த பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர். இவரது கணவர் சங்கர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். 

இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் பிரீத்தி நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரீத்தி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவினாசியில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி