திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பாதிரியார் ராபர்ட் (57) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குன்னத்தூர் மரியபுரத்தில் உள்ள தேவாலய வளாகத்தில் செயல்படும் பள்ளியில் கடந்த ஐந்து வருடங்களாக ராபர்ட் தாளாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.