சேவூர், தெக்கலூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகின்றன. இதனால், சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பாப்பாங்குளம், வாலியூர், தண்ணீர் பந்தல் பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, வடுகபாளையம், சென்னியாண் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். மின்வாரியம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.