அவினாசி: மின்கம்பியில் மோதி மயில் இறப்பு

அவினாசி ஒன்றியம் கருமாபாளையம் தண்ணீர்பந்தல்பாளையம் முத்தம்மாள் நகர் பகுதியில் ஏராளமான மயில்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் முத்தம்மாள் நகர் பகுதியில் பறந்து வந்த ஒரு பெண்மயில் மின்கம்பத்தின் மேல்புறமாக பறந்து சென்றது. அப் போது எதிர்பாராதவிதமாக மயில் மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து, கருகி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மின்கம்பத்தின் மேல் தொங்கிய மயிலை மீட்டு அப்பகுதியிலேயே அடக்கம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி