அவினாசி போலீசார் ஈரோடு சாலை பழங்கரை பிரிவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் அவினாசி பார்க் வீதியைச் சேர்ந்த பாலாஜி (வயது 20) என்பது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிள் உரிமத்துக்கான ஆவணங்கள் ஏதுமில்லை என்பதும், அவரது வீட்டின் அருகே சாவியுடன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.