இதன் உரிமையாளர் ரத்தினசாமி கடந்த 30 ஆண்டுகளாக இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை நகராட்சி அலுவலகத்தின் மிகப் பழமையான சுற்றுச்சுவர் பலமிழந்து சரிந்து அருகில் இருந்த தனியார் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்தது. இதில் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் 20 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் முழுமையாக சேதமடைந்தன. நல்வாய்ப்பாக அந்த இடத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சேதமடைந்த வாகனங்களின் மதிப்பு சுமார் 6 முதல் 7 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நகராட்சி அலுவலர்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு